சினிமா செய்திகள்

நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் 2- ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது + "||" + Actor Vijay beast 2nd phase shooting started in Chennai

நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் 2- ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது

நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் 2- ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் 2- ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் தொடங்கியது.
சென்னை

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் பீஸ்ட்  படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் யோகி பாபு, ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

விஜய் தனது 47-வது பிறந்தநாளை  முன்னிட்டு அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.  சமூக வலைத்தளங்களில் விஜயின் பீஸ்ட் படம் குறித்த அப்டேட்கள் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன. 

பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

தற்போது  பீஸ்ட் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்  தொடங்கி உள்ளது. சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு அரங்கில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. கோடி கணக்கில் சம்பளம் ...ரோட்டோர கடையில் பேரம் ...! வைரலாகும் நயன்தாரா வீடியோ
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.
2. சீரடி சாய்பாபா கோவிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று சாமிகும்பிட்டனர்.
3. இன்று மாலை வெளியாகிறது 'அண்ணாத்த' டீசர்
விஸ்வாசம் படத்திற்கு பின் டைரக்டர் சிறுத்தை சிவா தற்போது ஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார்.
4. தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளியதாக பிரபல நடிகை பரபரப்பு புகார்
தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி, மோசமாக பேசினார் என்று இன்டீரியர் டிசைனர் மீது நடிகை மீரா சோப்ரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
5. பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
பிரபல நடிகர் நெடுமுடி வேணு தனது 73 வயதில் காலமானார்