‘எமர்ஜென்சி’ என்ற பெயரில் இந்திராகாந்தி படத்தை கங்கனா ரணாவத் இயக்குகிறார்


‘எமர்ஜென்சி’ என்ற பெயரில் இந்திராகாந்தி படத்தை கங்கனா ரணாவத் இயக்குகிறார்
x
தினத்தந்தி 2 July 2021 11:04 AM GMT (Updated: 2021-07-02T16:34:55+05:30)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு டைரக்டர் விஜய் இயக்கத்தில், ‘தலைவி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு டைரக்டர் விஜய் இயக்கத்தில், ‘தலைவி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. அதில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

இதையடுத்து, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘எமர்ஜென்சி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அதை சுட்டிக்காட்டும் விதத்தில், படத்துக்கு ‘எமர்ஜென்சி’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்திராகாந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பதுடன், டைரக்டும் செய்கிறார். இவர் ஏற்கனவே ‘மணிகர்னிகா’ என்ற இந்தி படத்தை டைரக்டு செய்திருக்கிறார்.

அவர் இயக்கும் இரண்டாவது படம், இது. ‘எமர்ஜென்சி’ படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

‘‘எமர்ஜென்சி படத்துக்கு திரைக்கதை அமைக்கும் பணி, கடந்த ஒரு வருடமாக நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். இந்த படத்தை என்னை விட சிறப்பாக வேறு யாரும் டைரக்டு செய்ய முடியாது என்பதால், நானே டைரக்டு செய்கிறேன்.’’

Next Story