சூர்யா நடத்தும் தடுப்பூசி முகாம்


சூர்யா நடத்தும் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 3 July 2021 3:01 AM GMT (Updated: 2021-07-03T08:31:43+05:30)

நடிகர் சூர்யா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க நடிகர், நடிகைகள் தொடர்ந்து விழிப்பணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். கொரோனா தடுப்பூசி போட்ட புகைப்படங்களை வலைத்தளங்களில் பகிர்ந்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படியும் வற்புறுத்துகிறார்கள்.

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

சூர்யாவுக்கு சொந்தமாக 2டி பட நிறுவனம் உள்ளது. இதில் பல ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சூர்யாவின் பட வேலைகளை கவனிக்கவும் ஊழியர்கள் உள்ளனர். 2டி பட நிறுவனம் தயாரிக்கும் படங்களிலும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றுகிறார்கள். இந்த ஊழியர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக இந்த தடுப்பூசி முகாமை சூர்யா நடத்துகிறார்.

ஏற்கனவே சூர்யா தனது பட நிறுவனம் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story