இந்தியில் ரீமேக்காகும் 9 தமிழ் படங்கள்


இந்தியில் ரீமேக்காகும் 9 தமிழ் படங்கள்
x
தினத்தந்தி 3 July 2021 3:33 AM GMT (Updated: 2021-07-03T09:03:34+05:30)

தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வசூல் குவித்த கைதி படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் அஜய்தேவ்கான் நடிக்க உள்ளார்.

தமிழில் மாதவன், விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா படம் இந்தியில் ஹிருத்திக் ரோஷன், சயீப் அலிகான் நடிக்க ரீமேக் ஆக உள்ளது. விக்ரம் நடித்த அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக டைரக்டர் ஷங்கர் சமீபத்தில் அறிவித்தார். இந்த படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார்.

மாநகரம் படம் இந்தியில் மும்பைக்கார் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் விஜய்சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ராட்சசன் படம் இந்தியில் அக்‌ஷய்குமார் நடிக்க ரீமேக் ஆக உள்ளது.

விஜய் நடித்து திரைக்கு வந்து ரசிகர்கள் மதியில் வரவேற்பை பெற்ற மாஸ்டர், நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா மற்றும் ஜிகர்தண்டா, துருவங்கள் பதினாறு ஆகிய படங்களையும் இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

Next Story