சத்தமே இல்லாமல் சாதனை; 400 படங்களில் வையாபுரி!


சத்தமே இல்லாமல் சாதனை; 400 படங்களில் வையாபுரி!
x
தினத்தந்தி 3 July 2021 9:45 PM GMT (Updated: 2021-07-04T03:15:53+05:30)

நகைச்சுவை நடிகர் வையாபுரி சத்தமே இல்லாமல் 400 படங்களில் நடித்து சாதனை புரிந்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களில் அவர் நடித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகிறார்:-

‘‘தமிழில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். அதேபோல் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளேன். மலையாளத்தில் 6 படங்களில் நடித்துள்ளேன். மொத்தத்தில் 400 படங்களை தாண்டி விட்டேன். ‘சுந்தரி’ என்ற சின்னத்திரை தொடருக்காக மூன்று நாட்கள் ‘கால்சீட்’ கேட்டார்கள். ‘கட்டம் கந்தசாமி’ என்ற நகைச்சுவை ஜோதிடராக நடித்ததற்கு ஏகப்பட்ட பாராட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது.

நான் சினிமா, டி.வி. என்று வித்தியாசம் பார்க்க மாட்டேன். அப்பா வேடம் என்றாலும் சரி, குணச்சித்திர வேடங்கள் என்றாலும் சரி, எந்த வேடத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு சினிமாவை விட்டால், வேறு தொழில் தெரியாது. ‘சைடு பிசினஸ்’ கிடையாது. நடிப்பு தொழில்தான் குடும்பத்தை காப்பாற்றுகிறது. என் மகன் ஷ்ரவன் பல் டாக்டருக்கு (இரண்டாம் வருடம்) படிக்கிறான். மகள் சிவானி ‘பிளஸ்-2’ படிக்கிறாள்’’ என்றார்.

Next Story