சினிமா செய்திகள்

கரகாட்டக்காரர்களுடன் விஜய் சேதுபதி குத்தாட்டம்! + "||" + Vijay Sethupathi stabs with caricatures!

கரகாட்டக்காரர்களுடன் விஜய் சேதுபதி குத்தாட்டம்!

கரகாட்டக்காரர்களுடன் விஜய் சேதுபதி குத்தாட்டம்!
‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதிக்கு நல்ல நேரம். அவர் நடித்த ஆரம்பகால படங்கள் வெற்றி பெற்றதால், அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீச ஆரம்பித்தது.
அதை அவர் பயன்படுத்திக்கொண்டார். தற்போது அதிக படங்களை கையில் வைத்திருக்கும் கதாநாயகன், இவர்தான். சினிமாவில் எந்த வேடம் கிடைத்தாலும் நடிக்கும் அவர், ‘சின்னத்திரை’ நிகழ்ச்சிகளையும் புறக்கணிப்பதில்லை. சமீபத்தில், ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக குத்தாட்டம் போட்டார். நையாண்டி மேளத்துக்கு ஏற்ப கரகாட்டக்காரர்களுடன் அவர் ஆட்டம் போட்டது, களை கட்டியது.

‘‘சினிமாவில் ஒருவன் வர வேண்டும் என்று இறைவன் முடிவு செய்துவிட்டால், அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது’’ என்கிறார் விஜய் சேதுபதி.

அதிகம் வாசிக்கப்பட்டவை