20 வயதில் திருமணம் செய்தது தவறு: ரேவதி


20 வயதில் திருமணம் செய்தது தவறு: ரேவதி
x
தினத்தந்தி 3 July 2021 10:07 PM GMT (Updated: 2021-07-04T03:37:55+05:30)

‘‘நான் 17 வயதில் சினிமாவுக்கு வந்தேன். 20 வயதில் திருமணம் செய்து கொண்டேன். அப்படி அவசரப்பட்டு செய்திருக்கக்கூடாது என்று பின்னால் வருத்தப்பட்டேன். ‘புன்னகை மன்னன்’ படம் வந்த நேரம் அது. இன்னும் சில நல்ல படங்களில் நடித்துவிட்டு திருமணம் செய்திருக்கலாம் என்று அப்புறம் உணர்ந்தேன்...’’ என்கிறார் ரேவதி.

அவர் மேலும் கூறும்போது, ‘‘நான் நடிப்பதற்கு கொஞ்சம் பதற்றப்பட்டது சிவாஜியுடன் ‘லட்சுமி வந்தாச்சு’ படத்தில்தான். அது ஒரு பாடல் காட்சி. அவர் கால்களை தொட்டு வணங்குவது போல் காட்சி. சிவாஜியுடன் நடிப்பதற்கு பதற்றப்பட்டது உண்மை...’’ என்றார். ‘‘உங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த சக போட்டியாளர் யார்?’’ என்ற கேள்விக்கு, ‘‘பூர்ணிமா பாக்யராஜ். அது செல்போன் வராத காலம். பூர்ணிமாவிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. என் நடிப்பை பாராட்டி அவர் எழுதிய ஒவ்வொரு வார்த்தையையும் மறக்க முடியாது’’ என்று ரேவதி கூறினார். (‘‘ரேவதி, பூர்ணிமா, ஊர்வசி, ஷோபனா ஆகிய 4 பேரும் ஒரே சமயத்தில் திரையுலகுக்கு வந்தவர்கள்)

‘‘நீங்கள் நடித்து உங்களை கவர்ந்த பிற மொழி படங்கள் எவை?’’ என்ற கேள்விக்கு, ‘‘மலையாளம், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் எனக்கு சில மறக்க முடியாத படங்கள் அமைந்தன’’ என்று ரேவதி பதில் அளித்தார்.

Next Story