சினிமா செய்திகள்

சீதை, திரவுபதியாக நடிக்கும் தீபிகா படுகோனே + "||" + Deepika Padukone as Sita and Draupadi

சீதை, திரவுபதியாக நடிக்கும் தீபிகா படுகோனே

சீதை, திரவுபதியாக நடிக்கும் தீபிகா படுகோனே
சீதை, திரவுபதியாக நடிக்கும் தீபிகா படுகோனே.
தீபிகா படுகோனே திரவுபதியாகவும், சீதையாகவும் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. 2 வருடங்களுக்கு முன்பே மகாபாரதம் கதையை படமாக்கும் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாததால் படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது. இதற்கிடையே இந்த படத்தை தயாரிக்கும் மது மந்தனா தற்போது அளித்துள்ள பேட்டியில், “மகாபாரதம் கதையை படமாக்கும் நேரம் வந்து விட்டது. இந்த படத்தின் கதை தீபிகா படுகோனேவுக்கு பிடித்துபோனதால் திரவுபதியாக நடிக்க முன்வந்துள்ளார். புராணங்களை படமாக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் கடும் முயற்சிகள் எடுத்து எல்லா தகவல்களையும் சேகரித்தோம். இப்போது மகாபாரதம் கதையை படமாக்கும் அனைத்து தகவல்களும் எங்களிடம் இருக்கிறது. இந்த படத்தை எடுக்க கொஞ்சகாலம் ஆகும். அதற்குள் ராமாயணத்தை படமாக்கும் வேலையை தொடங்க இருக்கிறோம்’’ என்றார்.


ராமாயணம் படத்திலும் சீதையாக நடிக்க தீபிகா படுகோனேவை தேர்வு செய்துள்ளனர். சீதையாகவும், திரவுபதியாகவும் நடிக்கும் பெருமை தீபிகா படுகோனேவுக்கு கிடைத்துள்ளது. இதுவரை எந்த நடிகையும் 2 கதாபாத்திரங்களிலும் நடிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் சொகுசு பங்களா வாங்கிய தீபிகா படுகோனே - விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
நடிகை தீபிகா படுகோனேவுக்கும், நடிகர் ரன்வீர் சிங்குக்கும் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் சொத்துக்கள் உள்ளன.
2. மீண்டும் வாய்ப்பு ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.