சினிமா செய்திகள்

மீனாவுக்கு பிடித்த நடிகர்கள் + "||" + Meena's favorite actors

மீனாவுக்கு பிடித்த நடிகர்கள்

மீனாவுக்கு பிடித்த நடிகர்கள்
தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா திருமணத்துக்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா திருமணத்துக்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மோகன்லாலுடன் நடித்த மலையாள படமான திரிஷ்யம் வசூல் சாதனை நிகழ்த்தியது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்தார். திரிஷ்யம் 2-ம் பாகம் பாபநாசம் 2 என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆக உள்ளது என்றும், அதில் கமல்ஹாசன் ஜோடியாக மீனா நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டது. பின்னர் மீனாவுக்கு பதில் நதியாவிடம் பேசி வருவதாக பேச்சு கிளம்பியது. இந்த நிலையில் மீனா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு ரசிகர் பாபநாசம் 2-ம் பாகத்தில் நடிக்கிறீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு கமல்ஹாசனிடம் கேளுங்கள் என்று பதில் அளித்தார். கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு சிவாஜி கணேசன், விஜய், நாகேஷ்வரராவ், நெடுமுடி வேணு ஆகியோர் எனக்கு பிடித்த நடிகர்கள் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹைப்பர் - லிங்க் கதையில் இணைந்த மூன்று இளம் நடிகர்கள்
குறும்படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீபன் ராஜ், திரைத்துறையில் அறிமுகமாகும் முதல் படத்தில் மூன்று ஹீரோக்கள் நடிக்க இருக்கிறார்கள்.