முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த நடிகை யாஷிகா


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த நடிகை யாஷிகா
x
தினத்தந்தி 5 July 2021 10:26 AM GMT (Updated: 5 July 2021 10:26 AM GMT)

முதல்-அமைச்சருடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை யாஷிகா சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இந்நிலையில், தற்போது முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நேற்று முதன்முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபின், நேற்று காலை சைக்கிள் பயணம் மேற்கொண்டதால், காவலர்கள் அவரைப் பின்தொடா்ந்து பாதுகாப்புக்காக வந்தனா்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகை யாஷிகா, முதல்-அமைச்சரின் சைக்கிள் பயணத்தின்போது அவருடன் அருகில் நின்று செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் யாஷிகா வெளியிட்டுள்ளார்.

Next Story