சினிமா செய்திகள்

தனுசின் புதிய படங்கள் + "||" + New pictures of Dhanush

தனுசின் புதிய படங்கள்

தனுசின் புதிய படங்கள்
தனுஷ் நடித்த கர்ணன், ஜெகமே தந்திரம் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன.
தனுஷ் நடித்த கர்ணன், ஜெகமே தந்திரம் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. இந்தியில் அக்‌ஷய்குமாருடன் நடித்துள்ள அந்த்ராங்கி ரே திரைக்கு வர தயாராக உள்ளது. தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது தனுசுக்கு 43-வது படம். அடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் தயாராகும் இன்னொரு படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார்.


இந்த படத்தை தெலுங்கில் தொலி பிரெமா, மிஸ்டர் மஜ்னு, ரங்தே படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி டைரக்டு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஐதராபாத்தில் தங்கி உள்ள தனுசுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பண்டிகையில் ரிலீசாகும் பெரிய நடிகர்கள் படங்கள்
பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் வெளியிடும்படி ஏற்கனவே தயாரிப்பாளர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.
2. கமல் நடிக்கும் 5 படங்கள்
கமல்ஹாசன் விக்ரம் படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.
3. ரிலீசுக்கு தயாரான விஜய்சேதுபதி படங்கள்
விஜய்சேதுபதி கைவசம் 11 படங்கள் உள்ளன.
4. இன்று தியேட்டர்கள் திறப்பு திரைக்கு வரும் 40 புதிய படங்கள்
இன்று தியேட்டர்கள் திறப்பு திரைக்கு வரும் 40 புதிய படங்கள்.
5. விக்ரமின் 3 படங்கள்
நடிகர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் பெயரிடப்படாத 60-வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.