சினிமா செய்திகள்

நயன்தாராவின் 3 புதிய படங்கள் + "||" + 3 new pictures of Nayantara

நயன்தாராவின் 3 புதிய படங்கள்

நயன்தாராவின் 3 புதிய படங்கள்
நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் கடந்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தொடர்ந்து நிழல் மலையாள படம் வந்தது.
நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் கடந்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தொடர்ந்து நிழல் மலையாள படம் வந்தது. தற்போது நெற்றிக்கண் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பார்வையற்றவராக வருகிறார். இந்த படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி நடக்கிறது.


ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் அவர் வழக்கறிஞர் கதாபாத்திரம் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

விக்‌னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கிறார். இதில் இன்னொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

அடுத்து மேலும் 3 புதிய படங்களில் நடிக்க உள்ளார். அதில் ஒரு படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் இயக்குவதாகவும், இன்னொரு படத்தை எலி, தெனாலிராமன் ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் டைரக்டு செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கிலும் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பண்டிகையில் ரிலீசாகும் பெரிய நடிகர்கள் படங்கள்
பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் வெளியிடும்படி ஏற்கனவே தயாரிப்பாளர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.
2. கமல் நடிக்கும் 5 படங்கள்
கமல்ஹாசன் விக்ரம் படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.
3. ரிலீசுக்கு தயாரான விஜய்சேதுபதி படங்கள்
விஜய்சேதுபதி கைவசம் 11 படங்கள் உள்ளன.
4. இன்று தியேட்டர்கள் திறப்பு திரைக்கு வரும் 40 புதிய படங்கள்
இன்று தியேட்டர்கள் திறப்பு திரைக்கு வரும் 40 புதிய படங்கள்.
5. விக்ரமின் 3 படங்கள்
நடிகர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் பெயரிடப்படாத 60-வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.