சினிமா செய்திகள்

ரிலீசுக்கு முன்பே அஜித்தின் வலிமை ரூ.200 கோடி வசூல் + "||" + Before the release, Ajith's strength was Rs 200 crore

ரிலீசுக்கு முன்பே அஜித்தின் வலிமை ரூ.200 கோடி வசூல்

ரிலீசுக்கு முன்பே அஜித்தின் வலிமை ரூ.200 கோடி வசூல்
ரிலீசுக்கு முன்பே அஜித்தின் வலிமை ரூ.200 கோடி வசூல்.
அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படம் பற்றிய விவரங்களை வெளியிடும்படி படக்குழுவினரை ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர்களிடமும் வலிமை அப்டேட் கேட்டு பரபரப்பு ஏற்படுத்துகின்றனர்.


இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தின் உலக அளவிலான தியேட்டர் உரிமை, ஓ.டி.டி. தள டிஜிட்டல் உரிமை, தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது.

எவ்வளவு தொகைக்கு வியாபாரம் ஆனது என்பதை அறிய ரசிகர்களும் திரையுலகினரும் ஆர்வம் காட்டினர். இந்த நிலையில் வலிமை படம் ரூ.200 கோடிக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

அஜித்தின் முதல் தோற்றத்தை வெளியிடும் முன்பே இவ்வளவு பெரிய தொகையை வலிமை வசூலித்து இருப்பது பட உலகினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. வலிமை படத்தில் அஜித் ஜோடியாக கியூமா குரோஷி நடித்துள்ளார். வினோத் இயக்கி உள்ளார். படத்தில் ஒரு சண்டை காட்சி மட்டும் படமாக்க வேண்டி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.1 லட்சம் கட்டினால் மாதம் ரூ.15 ஆயிரம்: சென்னையில் நூதன முறையில் ரூ.100 கோடி மோசடி
ரூ.1 லட்சம் கட்டினால் மாதம் ரூ.15 ஆயிரம் கிடைக்கும் என்று ஆசை காட்டி பொதுமக்களிடம் நூதன முறையில் ரூ.100 கோடி மோசடி செய்த புகாரில் தனியார் நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்.
2. சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூல்
சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூல் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாநகராட்சி நோட்டீஸ்.
3. கொரோனா விதிமுறைகள் மீறல் ரூ.3.79 கோடி அபராதம் வசூல்
கொரோனா விதிமுறைகள் மீறல் ரூ.3.79 கோடி அபராதம் வசூல்.
4. சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரூ.3.79 கோடி அபராதம் வசூல்
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் ரூ.3.79 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
5. சென்னையில் ஆபாச படம் பார்த்தவா்களை போலீசார் என மிரட்டி பணம் வசூல்
சென்னையில் ஆபாச படம் பார்த்தவா்களை போலீசார் என கூறி, மிரட்டி பணம் வசூலித்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனா்.