சினிமா செய்திகள்

நடிகையுடன் காதல் அமீர்கான் 3-வது திருமணம்? + "||" + Aamir Khan's 3rd marriage in love with actress?

நடிகையுடன் காதல் அமீர்கான் 3-வது திருமணம்?

நடிகையுடன் காதல் அமீர்கான் 3-வது திருமணம்?
56 வயதாகும் அமீர்கான், 29 வயதுள்ள பாத்திமா சனாஷேக்கை 3-வது திருமணம் செய்ய இருப்பதாக இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மும்பை,

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் தனது முதல் மனைவி ரீனா தத்தாவை 2002-ல் விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு ஜூனைத் என்ற மகனும், ஈரா என்ற மகளும் உள்ளனர். பின்னர் 2005-ல் லகான் இந்தி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கையும் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கசந்துள்ளது. கிரண்ராவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். இவர்கள் பிரிவுக்கு இந்தி நடிகை பாத்திமா சனாஷேக் காரணம் என்று தகவல் பரவி வருகிறது. தங்கல் படத்தில் அமீர்கான் மகளாக பாத்திமா சனாஷேக் நடித்து இருந்தார். அந்த படம் வெற்றி பெற்றது. பின்னர் அமீர்கானுக்கும், பாத்திமா சனாஷேக்குக்கும் நெருக்கம் ஏற்பட்டது. விருந்து நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்று வந்தனர். இருவரும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தன.

இந்த நிலையில் பாத்திமா சனாஷேக்கை திருமணம் செய்வதற்காகவே கிரண் ராவை அமீர்கான் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. பாத்திமா சனாஷேக் ஐதராபாத்தை சேர்ந்தவர். மும்பை சென்று திரைப்படங்களில் நடித்தார். 56 வயதாகும் அமீர்கான், 29 வயதுள்ள பாத்திமா சனாஷேக்கை 3-வது திருமணம் செய்ய இருப்பதாக இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.