சினிமா செய்திகள்

2 பாகங்களாக விக்ரம் படம் + "||" + Vikram movie in 2 parts

2 பாகங்களாக விக்ரம் படம்

2 பாகங்களாக விக்ரம் படம்
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கினார். பார்த்திபன், ரித்துவர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இதன் பட வேலைகளை 2017-ம் ஆண்டிலேயே தொடங்கினர். வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு சில பிரச்சினைகளால் தள்ளி வைத்தனர். 2020-ல் வெளியாகும் என்று எதிர்பார்த்து அப்போதும் வரவில்லை. கடந்த ஜூன் மாதம் வெளியாக இருந்த நிலையில் மீண்டும் முடங்கியது. படத்தில் சில காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது என்றும், சில பிரச்சினைகளால் படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டது. தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் காட்சிகள் 4½ மணி நேரம் ஓடக்கூடிய வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே துருவ நட்சத்திரம் படத்தை பாகுபலி போன்று 2 பாகங்களாக வெளியிட படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் கைவசம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படங்கள் உள்ளன.