சினிமா செய்திகள்

அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் + "||" + Actor Rajinikath Return to Chennai From America

அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனையை முடித்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
சென்னை

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினைகள் ஏற்பட்டன. 

இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சமீபத்தில் மீண்டும் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார். தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பிய அவர் கடந்த 19-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 

அங்கு மாயோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனைகளை முடிந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திற்கு அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அண்ணாத்த படத்துக்கு ‘டப்பிங்' பேசிய ரஜினி
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே ஐதராபாத்தில் நடந்த இதன் படப்பிடிப்புகளில் அதிக நாட்கள் பங்கேற்று நடித்தார். பின்னர் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து சென்னை திரும்பி மீண்டும் விடுபட்ட காட்சிகளுக்காக இரண்டு நாட்கள் நடித்து கொடுத்தார்.
2. மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை ஜூலை 12ஆம் தேதி சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12 ஆம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
3. அமெரிக்காவில் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா தனுஷ்...! வைரலாகும் புகைப்படம்
அமெரிக்க ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார்.
4. அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த்
மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகந்த் இன்று காலை தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார்.
5. சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சை,ஓய்வுக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்
சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் ரஜினிகாந்த் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக அமெரிக்கா செல்லவுள்ளார்.