சினிமா செய்திகள்

திருமணம் செய்து கொள்ளாமல் நயன்தாரா மவுனம் காப்பது ஏன்? பெற்றோர்கள் வருத்தம் + "||" + Without getting married Why Nayantara is keeping silent Parents upset

திருமணம் செய்து கொள்ளாமல் நயன்தாரா மவுனம் காப்பது ஏன்? பெற்றோர்கள் வருத்தம்

திருமணம் செய்து கொள்ளாமல் நயன்தாரா மவுனம் காப்பது ஏன்?  பெற்றோர்கள் வருத்தம்
இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரண்டு பேரின் பெற்றோர்களும் ஆசைப்படுகிறார்கள். குறிப்பாக நயன்தாராவின் தந்தை குரியன் மகளின் திருமணத்தை பார்க்க மிகவும் ஆசைப்படுகிறார்.
நடிகை நயன்தாரா முதன்முதலாக சிம்புவை காதலித்தார். இருவரும் திருமணம் வரை நெருங்கினார்கள். இந்த நிலையில், இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன்பிறகு நயன்தாராவுக்கும், நடிகர்-டான்ஸ்மாஸ்டர்-டைரக்டர் பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக, நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டார்.

பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். இருப்பினும் இந்த காதலும் தோல்வியில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து நயன்தாராவுக்குள் மூன்றாவது காதல் துளிர்த்தது. டைரக்டர் விக்னேஷ் சிவன் மூன்றாவது காதலர் ஆனார். இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள். திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில், கணவன் -மனைவி போல் வாழ்ந்து வருகிறார்கள்.

இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரண்டு பேரின் பெற்றோர்களும் ஆசைப்படுகிறார்கள். குறிப்பாக நயன்தாராவின் தந்தை குரியன் மகளின் திருமணத்தை பார்க்க மிகவும் ஆசைப்படுகிறார். அவர் வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவாக இருக்கிறார். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் விக்னேஷ் சிவன் குடும்பத்தினரும், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் சீக்கிரமே நடக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். 2 பேர் குடும்பங்களுக்கும் நயன்தாரா பதில் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்.