சினிமா செய்திகள்

வெளியானது ‘வலிமை’ அப்டேட்: படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு + "||" + Strength update released: Motion poster release of the film

வெளியானது ‘வலிமை’ அப்டேட்: படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

வெளியானது ‘வலிமை’ அப்டேட்: படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வெளியானது. இதன் பிறகு மீண்டும் அஜித்-வினோத் கூட்டணியில் ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அதே ஆண்டில் தொடங்கியது. ஆனால் அதன் பிறகு திரைப்படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத் மட்டுமல்லாது கிரிக்கெட் மைதானங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், அரசியல் தலைவர்களிடமும் டுவிட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் வலிமை அப்டேட் குறித்து தொடர்ந்து கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட் - வெளியிட்ட படக்குழு
இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி அவருடைய அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறார்.
2. சிம்புவின் அடுத்த பட அப்டேட்
வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களை தொடர்ந்து இளம் இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு.
3. பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
4. வீரமே வாகை சூடும் டிரைலர் அப்டேட்
விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
5. எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட்
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.