சினிமா செய்திகள்

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் மரணம் + "||" + Trapped in an accident Death of famous actor

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் மரணம்

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் மரணம்
எடறி வர்ஷம், மினுகுருலு, ஹிருதய கலேயம், நானே ராஜு நானே மந்திரி, கொப்பரி மட்டா, கிராக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் கத்தி மகேஷ். இவர் எடறி வர்ஷம், மினுகுருலு, ஹிருதய கலேயம், நானே ராஜு நானே மந்திரி, கொப்பரி மட்டா, கிராக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பெசராட்டு என்ற படத்தை இயக்கி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். தெலுங்கு முன்னணி நடிகர்களை விமர்சித்து அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கினார். சமீபத்தில் நெல்லூரில் இருந்து ஐதராபாத்துக்கு காரில் சென்றபோது லாரி மோதி விபத்துக்கு உள்ளானார். பலத்த காயம் அடைந்த கத்தி மகேஷ் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 2 வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது மருத்துவ செலவுக்காக ஆந்திர அரசும் ரூ.17 லட்சம் வழங்கியது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கத்தி மகேஷ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 44. கத்தி மகேஷ் மறைவுக்கு நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.