சினிமா செய்திகள்

சூரரைப்போற்று படத்தின் இந்தி ‘ரீமேக்'கை தயாரிக்கும் சூர்யா + "||" + Of the film with Soorarai Potru Surya produces Hindi remake

சூரரைப்போற்று படத்தின் இந்தி ‘ரீமேக்'கை தயாரிக்கும் சூர்யா

சூரரைப்போற்று படத்தின் இந்தி ‘ரீமேக்'கை தயாரிக்கும் சூர்யா
சூரரைப்போற்று படம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட மேலும் பலர் நடித்து இருந்தனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட மேலும் பலர் நடித்து இருந்தனர். விமான நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து தயாரானது. ‘சூரரைப்போற்று' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். சூர்யா கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தி பதிப்பையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். சூரரைப்போற்று இந்தி ரீமேக்கை சூர்யா தனது 2டி பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இதுகுறித்து சூர்யா கூறும்போது, ‘சூரரைப்போற்று' திரைப்படத்துக்கு கிடைத்த அன்பும் பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்த கதையை நான் முதன்முதலில் கேட்டதில் இருந்தே இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் அதன் ஆன்மா அப்படிப்பட்டது. பிறருக்கு உத்வேகத்தை தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில், அபண்டன்ஷியா என்டெர்டெய்ன்மெண்டுடன் இணைந்து தயாரிப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது" என்றார்.