சினிமா செய்திகள்

சர்ச்சை தொடரில் நடிக்கிறேனா? விஜய் சேதுபதி விளக்கம் + "||" + Whether acting in the controversy series Vijay Sethupathi Description

சர்ச்சை தொடரில் நடிக்கிறேனா? விஜய் சேதுபதி விளக்கம்

சர்ச்சை தொடரில் நடிக்கிறேனா? விஜய் சேதுபதி விளக்கம்
சர்ச்சை தொடரில் நடிக்க விஜய் சேதுபதி எப்படி சம்மதித்தார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்தியில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி ஆகியோர் நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான பேமிலிமேன் 2 தொடர் சர்ச்சையை கிளப்பியது. அதில் சமந்தா ஏற்று நடித்த போராளி கதாபாத்திரத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. தொடரை தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.

அடுத்து இந்த தொடரின் மூன்றாம் பாகம் தயாராக உள்ளது. இதில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவின. சர்ச்சை தொடரில் நடிக்க விஜய் சேதுபதி எப்படி சம்மதித்தார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு விஜய்சேதுபதி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, “நான் ஷாகித் கபூருடன் இணைந்து புதிய வெப் தொடரில் நடிக்கிறேன். மனோஜ்பாயுடன் சேர்ந்து எந்த தொடரிலும் நடிக்கவில்லை. ஆனாலும் அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது’’ என்றார்.

விஜய்சேதுபதி நடித்துள்ள லாபம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை