சினிமா செய்திகள்

இளம் நடிகைக்கு பாலியல் மிரட்டல் + "||" + For the young actress Sexual intimidation

இளம் நடிகைக்கு பாலியல் மிரட்டல்

இளம் நடிகைக்கு பாலியல் மிரட்டல்
சமூக வலைத்தளங்கள் மூலம் மர்ம நபர்கள் பாலியல் தொல்லைகள் கொடுப்பதாக புகார் அளித்துள்ளனர்.
நடிகைகள் பலர் ஏற்கனவே சமூக வலைத்தளங்கள் மூலம் மர்ம நபர்கள் பாலியல் தொல்லைகள் கொடுப்பதாக புகார் அளித்துள்ளனர். தற்போது இன்னொரு நடிகையும் இந்த தொல்லையில் சிக்கி உள்ளார். அவரது பெயர் பிரதியுஷா பால்.

இவர் வங்க மொழி படங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பிரதியுஷா பாலுக்கு சிலர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.

பிரதியுஷா புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச இணைய தளத்திலும் பதிவேற்றி உள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியான பிரதியுஷா கொல்கத்தா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு ஒரு வருடமாக சமூக வலைத்தளத்தில் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் வந்தன. தொல்லை கொடுத்த நபரை நான் பிளாக் செய்ததால் மறுநாள் வேறு ஐ.டி.யில் இருந்து வந்து தொல்லை கொடுத்தார்.

ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்தேன். ஆனால் தற்போது எனது புகைப்படங்களை ஆபாச இணைய தளங்களில் வெளியிட்டு அவற்றை எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இதனால் போலீசுக்கு சென்றுள்ளேன்'' என்றார்.