சினிமா செய்திகள்

தாதாக்கள் கதை தனுசின் புதிய படம் ராயன்? + "||" + The story of the miners Dhanush new film is Rayan

தாதாக்கள் கதை தனுசின் புதிய படம் ராயன்?

தாதாக்கள் கதை தனுசின் புதிய படம் ராயன்?
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களுக்கு பிறகு இயக்குனர் செல்வராகவனும், தனுசும் மீண்டும் புதிய படத்தில் கைகோர்க்கிறார்கள்.
இந்த படத்துக்கு நானே வருவேன் என்று பெயர் வைத்து இருப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். பேய் படமாக தயாராவதாகவும் கூறப்பட்டது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நானே வருவேன் பெயரில் வணிக சாயல் இல்லை என்றும், பெயரை மாற்ற வேண்டும் என்றும் செல்வராகவனிடம் சிலர் வற்புறுத்தினர். இந்த நிலையில் அவர் தனுஷ் நடிக்க உள்ள படத்தின் கதையையே மாற்றிவிட்டதாகவும், படத்துக்கு ராயன் என்ற பெயரை வைக்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது. பேய் திகில் கதைக்கு பதிலாக தாதாக்கள் மோதலை மையப்படுத்தும் கதையம்சத்தில் திரைக்கதையை மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெயர் மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் ஏற்கனவே இந்தியில் அந்த்ராங்கி ரே படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. தி கிரே மேன் ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது கார்த்திக் நரேன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.