சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் நாளை மேற்கு வங்காளம் பயணம் + "||" + Actor Rajinikanth to tour West Bengal tomorrow

நடிகர் ரஜினிகாந்த் நாளை மேற்கு வங்காளம் பயணம்

நடிகர் ரஜினிகாந்த் நாளை மேற்கு வங்காளம் பயணம்
நடிகர் ரஜினிகாந்த் நாளை மேற்கு வங்காளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று சென்னை திரும்பி வந்ததும் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.  அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட பிறகு நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடனான முதல் சந்திப்பு நேற்று நடந்தது.

ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்தாலோசனை நடத்தினார். கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வருகை தருமாறு அவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது.  அதனை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல உதவிகளையும், பல சாதனைகளையும் உருவாக்கினோம்.

கால சூழலால் நம் எண்ணம் சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபட போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார்ந்த பணிகள் எதுவும் இன்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நல பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்து கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்! வாழ்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை மேற்கு வங்காளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.  அங்கே அவர் நான்கு நாட்கள் தங்கி இருந்து அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.  அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால் 4 நாட்கள் நடித்தால், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் ஏற்கனவே அறிவித்து உள்ளது.  அதனால், அதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்
ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி ஜோ பைடனையும் சந்தித்து பேசுகிறார்.
2. விநாயகர் சதுர்த்தியையொட்டி 576 சிறப்பு பஸ்கள் இயக்கம் சென்னையில் இருந்து 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் வெளியூர் பயணம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் இருந்து 576 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் வெளியூர் புறப்பட்டு சென்றதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
3. ராகுல் காந்தி இன்று ஜம்மு பயணம்: மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் தரிசனம்!
ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று ஜம்மு பயணம் மேற்கொள்கிறார். அங்கு மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
4. ரஷியாவில் அஜித் பைக் பயணம்
அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிகட்ட காட்சிகளை படமாக்க படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு ரஷியா சென்றனர்.
5. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் பயணம்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் புறப்பட்டு சென்றார்.