சினிமா செய்திகள்

தாத்தாவாகும் வயதில் மணப்பெண் தேடுவதா? நடிகர் அமீர்கான் 3-வது திருமணத்துக்கு எதிர்ப்பு + "||" + Actor Aamir Khan Opposition to the 3rd marriage

தாத்தாவாகும் வயதில் மணப்பெண் தேடுவதா? நடிகர் அமீர்கான் 3-வது திருமணத்துக்கு எதிர்ப்பு

தாத்தாவாகும் வயதில் மணப்பெண் தேடுவதா? நடிகர் அமீர்கான் 3-வது திருமணத்துக்கு எதிர்ப்பு
அமீர்கானின் 3-வது திருமணத்துக்கு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி சுதிர் குப்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான் ஏற்கனவே தனது முதல் மனைவி ரீனா தத்தாவை 2002-ல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஜூனைத் என்ற மகனும், ஈரா என்ற மகளும் உள்ளனர். 2005-ல் லகான் இந்தி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவை, அமீர்கான் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அசாத் ராவ் கான் என்ற மகன் உள்ளார். தற்போது கிரண்ராவையும் விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இவர்கள் பிரிவுக்கு தங்கல் படத்தில் அமீர்கான் மகளாக நடித்த பாத்திமா சனாஷேக் காரணம் என்றும் பாத்திமா சனா ஷேக்கை அமீர்கான் 3-வதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் மும்பை திரை உலகில் தகவல் பரவி வருகிறது. இதனை இருவரும் மறுக்கவில்லை. அமீர்கானுக்கு 56 வயது ஆகிறது. பாத்திமா சனா ஷேக்குக்கு 29 வயது.

இந்த நிலையில் அமீர்கானின் 3-வது திருமணத்துக்கு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி சுதிர் குப்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “அமீர்கான் தனது முதல் மனைவியை 2 குழந்தைகளோடு கைவிட்டார். இப்போது 2-வது மனைவி கிரண் ராவையும் ஒரு குழந்தையோடு கைவிட்டு இருக்கிறார். தாத்தாவாகும் வயதில் அமீர்கான் 3-வது மனைவியை தேடிக்கொண்டு இருக்கிறார்'' என்று கூறினார். சுதிர் குப்தா கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமீர்கான் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் அமீர்கானின் கருத்துக்கு கர்நாடக பா.ஜனதா எம்.பி. கடும் எதிர்ப்பு
டயர் நிறுவன விளம்பத்தில் இடம் பெற்றுள்ள நடிகர் அமீர்கானின் கருத்துக்கு பா.ஜனதா எம்.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.