சினிமா செய்திகள்

நயன்தாரா படத்துக்கு மீண்டும் விருது + "||" + For the Nayantara film Award again

நயன்தாரா படத்துக்கு மீண்டும் விருது

நயன்தாரா படத்துக்கு மீண்டும் விருது
“கூழாங்கல் தலைப்பை போல் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.
நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கூழாங்கல் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி உள்ளார். குடிகார தந்தைக்கும் மகனுக்குமான உறவை சித்தரிக்கும் கதை.

“கூழாங்கல் தலைப்பை போல் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. இத்திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்வது என முடிவு செய்துள்ளோம் என்று நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இதையடுத்து கூழாங்கல் படம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு விருது பெற்றது.

இந்த நிலையில் தற்போது கூழாங்கல் படம் இத்தாலியில் நடந்த சார்ட்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றுள்ளது. இதற்காக நயன்தாரா உள்ளிட்ட கூழாங்கல் படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கூழாங்கல் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.