சினிமா செய்திகள்

மீண்டும் 2 படங்களில் நடிக்க தயாராகும் ரஜினி + "||" + Again in 2 films Rajini is getting ready to act

மீண்டும் 2 படங்களில் நடிக்க தயாராகும் ரஜினி

மீண்டும் 2 படங்களில் நடிக்க தயாராகும் ரஜினி
ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றியதுடன் இனிமேல் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்காக தொடங்கிய மக்கள் மன்றத்தை கலைத்து முன்புபோல் ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றியதுடன் இனிமேல் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளார். அடுத்து 2 புதிய படங்களில் நடிக்க தீவிரமாகி உள்ளார். ஏற்கனவே அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். விடுபட்ட சில காட்சிகளுக்காக ஓரிரு நாட்கள் நடித்து கொடுக்க இருக்கிறார்.

அதன்பிறகு ரஜினியின் 169-வது படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிக்கு கார்த்திக் சுப்புராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், தேசிங் பெரியசாமி உள்ளிட்ட சில இயக்குனர்கள் கதை தயார் செய்துள்ளனர். இவர்களில் யாருடைய இயக்கத்தில் முதலில் நடிப்பார் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேசிங் பெரியசாமிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானவர்.

இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து தேசிங் பெரியசாமியை ரஜினி நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது தனக்கு கதை இருக்கிறதா என்று ரஜினி கேட்க உடனே தேசிங் பெரியசாமி ஒரு கதையை சொன்னதாகவும் அது ரஜினிக்கு பிடித்து போனதாகவும் கூறப்படுகிறது. அந்த கதையில் ரஜினி நடிக்கலாம் என்று தெரிகிறது. 6 மாதத்தில் இந்தப் படத்தை முடித்துவிட்டு இன்னொரு படத்திலும் நடிக்க உள்ளார். அந்த படத்தின் இயக்குனர் பற்றிய விவரமும் விரைவில் தெரியவரும்.