சினிமா செய்திகள்

நடிகர் அஜித்தை தொடர்ந்து கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டும் நடிகை நிவேதா பெத்துராஜ் + "||" + Actress Niveda Pethuraj is interested in participating in car racing

நடிகர் அஜித்தை தொடர்ந்து கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டும் நடிகை நிவேதா பெத்துராஜ்

நடிகர் அஜித்தை தொடர்ந்து கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டும் நடிகை நிவேதா பெத்துராஜ்
நடிகர் அஜித்தை தொடர்ந்து கார் பந்தயங்களில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ்
சென்னை

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டி வந்தார். அவரைப்போலவே நடிகை நிவேதாவும் தற்போது கார் ரேஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

’ஒருநாள் கூத்து’, ’பொதுவாக எம்மனசு தங்கம்’, ’டிக் டிக் டிக்’, ’திமிரு பிடிச்சவன்’ என தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ் 

அடியே அழகே என் அழகே அடியே பாடலின் மூலம் பிரபலமான நாயகி நிவேதா பெத்துராஜ், ரேஸ் காரில் மைதானத்தில் ரவுண்டு போன புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கோவையில் பார்முலா ரேஸ் கார் பயிற்சி முதல் நிலையை முடித்திருப்பதாகவும், சிறு வயது முதலே ஸ்போர்ட்ஸ் கார்கள் என்றால் மிகவும் விருப்பம் என நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வளர்ந்த நிவேதா கார்களின் மீதான காதல், பள்ளிக்கு சென்ற சிறுவயதிலேயே ஆரம்பித்துவிட்டது. எட்டாவது படித்துக் கொண்டிருக்கும்போது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது அத்தை ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்கள். அப்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது தீவிர ஆர்வமும், வேட்கையும் என்னுள் உருவாகிவிட்டது.  அங்கு ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய இரண்டாவது பெண் தான் என்றும் பெருமையாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகைகள் கொள்ளை
நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் ரூ.2. லடசம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
2. அரசியல், விவேக், தி.மு.க. ஆட்சி குறித்து நடிகர் வடிவேலு மனந்திறந்த பேட்டி- வீடியோ
இயக்குனர் சங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க வாய்ப்பே இல்லை. அந்த பக்கமே செல்லமாட்டேன் என நடிகர் வடிவேலு கூறி உள்ளார்.
3. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது
நவம்பர் 4 ந்தேதி தீபாவளி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தாயார் மரணம்
படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற அக்‌ஷய் குமாருக்கு அவரது தாயார் மறைவு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
5. ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணவத் மரியாதை
சென்னை, மெரினாவில் உள்ள முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணவத் மரியாதை செலுத்தினார்.