சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பட டைரக்டர் பெயரில் மோசடி + "||" + Sivakarthikeyan Fraud in the name of the film director

சிவகார்த்திகேயன் பட டைரக்டர் பெயரில் மோசடி

சிவகார்த்திகேயன் பட டைரக்டர் பெயரில் மோசடி
நடிகர் நடிகைகள் பெயர்களில் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி பண மோசடி நடப்பதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன.
இயக்குனர்கள் பெயர்களிலும் இதுபோல் போலி கணக்குகள் தொடங்கி நடிக்க வாய்ப்பு அளிப்பதாக சொல்லி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம் என்று நடிகர்களும் இயக்குனர்களும் ரசிகர்களை எச்சரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இயக்குனர் பொன்ராம் பெயரிலும் பண மோசடி நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது சசிகுமார் நடிக்கும் எம்.ஜி.ஆர். மகன் படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

மோசடி குறித்து டைரக்டர் பொன்ராம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “என் பெயரில் போலியாக பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கப்பட்டு சிலர் பணம் கேட்பதாக அறிந்தேன். யாரும் நம்ப வேண்டாம். பரிச்சயமான விவரமின்றி வரும் அழைப்புகளை ஏற்காதீர்கள்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படப்பிடிப்பு முடிந்து கொரோனாவால் பல மாதங்களாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது.
2. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், யானையை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுப்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் மற்றும் ஒரு பெண் யானையை நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாத காலத்துக்கு தத்தெடுத்துள்ளார்.
3. "18 வருடங்களுக்குப் பிறகு, எனது அப்பா, மகனாக எனது விரலை பிடித்திருக்கிறார்" - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.
4. வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன்
நடிகர், நடிகைகள் வீட்டில் காலியாக உள்ள இடத்திலும், மொட்டை மாடியிலும் காய்கறி தோட்டங்கள் அமைத்து வருகின்றனர்.
5. நலிந்த நடிகர்களுக்கு உதவிய சிவகார்த்திகேயன்
கொரோனா ஊரடங்கினால் திரைப்பட துறையினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சினிமா தொழிலாளர்களுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நிதி திரட்டி உதவிகள் வழங்கி வருகிறார்.