சினிமா செய்திகள்

தெலுங்கில் தயாராகும் ராட்சசன் 2-ம் பாகம் படத்தில் விஜய்சேதுபதி? + "||" + Ready in Telugu Ratchasan Part 2 in the film Vijay Sethupathi

தெலுங்கில் தயாராகும் ராட்சசன் 2-ம் பாகம் படத்தில் விஜய்சேதுபதி?

தெலுங்கில் தயாராகும் ராட்சசன் 2-ம் பாகம் படத்தில் விஜய்சேதுபதி?
தமிழில் விஷ்ணு விஷால், அமலாபால் ஜோடியாக நடித்து 2019-ல் திரைக்கு வந்த ராட்சசன் படத்துக்கு வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தது. சைக்கோ கொலையாளியை பற்றிய கதையசம்சத்தில் தயாராகி இருந்தது.
இந்த படத்தை தெலுங்கில் ராச்சுடு என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இதில் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் பெல்லம் கொண்டா சீனிவாஸ், அமலாபால் கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்தனர். ரமேஷ் வர்மா இயக்கினார். தெலுங்கிலும் படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்து தெலுங்கு ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இந்த படத்துக்கான போஸ்டரை -படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் ரத்தம் உறைந்த கத்தி மற்றும் ஒரு உருவம் பிணத்தை தூக்கி செல்வது போன்ற காட்சி உள்ளது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் கூடுதலான விறுவிறுப்பு இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். தெலுங்கு ராட்சசன் 2-ம் பாகத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழிலும் ராட்சசன் 2-ம் பாகம் விஷ்ணு விஷால் நடிக்க தயாராக உள்ளது.