சினிமா செய்திகள்

நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கும் டேட்டிங் நிகழ்ச்சி; ஓடிடியில் ஒளிபரப்பாகிறது + "||" + Kangana Ranaut to make OTT debut with the Indian adaptation of Temptation Island

நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கும் டேட்டிங் நிகழ்ச்சி; ஓடிடியில் ஒளிபரப்பாகிறது

நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கும் டேட்டிங் நிகழ்ச்சி;  ஓடிடியில் ஒளிபரப்பாகிறது
நடிகை கங்கனா ரனாவத் டேட்டிங் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது
மும்பை

பிக் பாஸ் போன்ற விதவிதமான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருன்றன.    கங்கனா ரனாவத்  ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். நிகழ்ச்சியின் பெயர், டெம்டேஷன் ஐலேண்ட்.

முன் பின் அறிமுகமில்லாத ஆண், பெண்களை தனித்தீவில் தங்க வைப்பார்கள். ஆளுக்கொரு ஜோடியை பிடித்துக் கொள்ள வேண்டும். விதவிதமான டாஸ்க்குகள் அளிக்கப்படும். இதன் முக்கிய அம்சம், இந்த ஆணும், பெண்ணுக்கும் ஏற்கனவே நிஜத்தில் காதலர்/காதலியாக இருப்பார்கள். 

அமெரிக்காவின் பாக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் தயாரிக்கிறார்கள். கங்கனா ரனாவத் இதனை தொகுத்து வழங்குகிறார். பிரபல ஓடிடி தளம் இதனை தயாரித்து, ஒளிபரப்புகிறது. 

தொலைக்காட்சி என்றால் இதில் இடம்பெறப்போகும் நெருக்கமான காட்சிகளுக்கு எதிர்ப்பு வரும். ஓடிடிக்கு சென்சார் தேவையில்லை. அதனால், ஓடிடியில் ஒளிபரப்புகிறார்கள். இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் பிரபலமடைந்தாலும் இந்த நிகழ்ச்சி முதலில் ஒளிபரப்பானது நெதர்லாந்தில். அங்கு பிளைன்ட் பெயித் என்ற பெயரில் ஒளிபரப்பானது. அது ஹிட்டாக, அதனை அப்படியே அமெரிக்காவில் தயாரித்து ஒளிபரப்பினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கங்கனா ரனாவத்தை ஜன.25-வரை கைது செய்ய மாட்டோம்: ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்
தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி கங்கனா ரனாவத் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
2. தொடர் வழக்கு :என்னை கைது செய்ய வந்தால்...! -நடிகை கங்கனா ரணாவத்
எந்த நேரமும் நான் கைது செய்யப்படலாம் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்து உள்ளார்.
3. கங்கனாவிற்கு வழங்கப்பட்ட ‘பத்மஸ்ரீ’ விருதை திரும்பப்பெறுக - ஜனாதிபதிக்கு சீக்கிய அமைப்பு கடிதம்
நடிகை கங்கனா ரனாவத்திற்கு வழங்கப்பட்ட 'பத்மஸ்ரீ’ விருதை திரும்பப்பெற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு சீக்கிய அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
4. 3 வேளாண் சட்டங்கள் வாபஸ்: அடேயப்பா ...! நடிகை கங்கனா ரனாவத்துக்கு என்ன கோபம் ...!
கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘சோகம், அவமானம் மற்றும் முற்றிலும் நியாயமற்றது’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளார்.
5. தியாகிகளை அவமரியாதை செய்தேனா? நிரூபித்தால் பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிக்கத் தயார்: கங்கனா ரனாவத்
ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் பேசிய கங்கனா ரனாவத், ‘1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை எனப்பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.