சினிமா செய்திகள்

சத்யராஜின் நீண்டநாள் ஆசை நிறைவேறியதா? + "||" + Of Sathyaraj Whether the long-held wish has come true

சத்யராஜின் நீண்டநாள் ஆசை நிறைவேறியதா?

சத்யராஜின் நீண்டநாள் ஆசை நிறைவேறியதா?
பொன்ராம் இயக்கியுள்ள ‘எம்.ஜி.ஆர். மகன்’ படம், அப்பா-மகனை பற்றிய கதை.
அப்பாவாக சத்யராஜ், மகனாக சசிகுமார் நடிக்கிறார்கள். மகன் சசிகுமாரை வக்கீலாக பார்க்க வேண்டும் என்று சத்யராஜுக்கு நீண்டநாள் ஆசை. அது நிறைவேறியதா? என்பதே கதை.

``சசிகுமாரின் ஜோடியாக மிருணாளினி, தாயாக சரண்யா பொன்வண்ணன், தாய்மாமனாக சமுத்திரக்கனி, சித்தப்பாவாக சிங்கம்புலி ஆகியோர் நடிக்கிறார்கள். ‘தினத்தந்தி’ வாசக ரான சசிகுமாருக்கு ‘தினத்தந்தி’ நாளிதழின் முதல் பக்கத்தில் தன்னைப் பற்றிய செய்தியும், படமும் வரவேண்டும் என்று ஆசை. அது எப்படி நிறைவேறுகிறது? என்பது திரைக்கதை'' என்கிறார், டைரக்டர் பொன்ராம்.