சினிமா செய்திகள்

அமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல் + "||" + Vijay Sethupathi withdraws from Aamir Khan movie

அமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்

அமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்
அமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி உள்ளார்.
1994-ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஹாலிவுட் படம், ‘பாரஸ்ட் கேம்ப்.’ வெற்றிகரமாக ஓடிய இந்த படம் வசூலில் சாதனை புரிந்ததுடன், பல விருதுகளையும் அள்ளியது. உலகின் மிகச் சிறந்த 10 படங்களில் இடம் பிடித்தது.

இந்த படம், ‘லால் சிங் சட்டா’ என்ற பெயரில், இந்தியில் படமாகிறது. இதில் அமீர்கான் கதாநாய கனாக நடிப்பதுடன் படத்தையும் தயாரிக்கிறார். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

படத்தில் இரண்டாவது உலகப்போர் காட்சிகள் இடம் பெறுகின்றன. அதில் சக போர் வீரனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். குறிப்பிட்ட காலத்தில் படப்பிடிப்பு நடக்காததால், படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக் கொண்டார்.

அவருக்கு பதில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கிறார். இவர் தொடர்பான காட்சிகளை லடாக் பகுதியில் படமாக்கி வருகிறார்கள்.