சினிமா செய்திகள்

அமலாபால் பகிர்ந்த வாழ்க்கை அனுபவம் + "||" + Life experience shared by Amala Paul

அமலாபால் பகிர்ந்த வாழ்க்கை அனுபவம்

அமலாபால் பகிர்ந்த வாழ்க்கை அனுபவம்
அமலாபால் தமிழ், மலையாளம், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.
இந்த நிலையில் சினிமா மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் கூறியதாவது:-

“நான் 17 வயதில் சினிமா துறைக்கு வந்தேன். சொந்த வாழ்க்கையில் சந்தித்த விஷயங்களை சினிமா வாழ்க்கையிலும் பார்த்தேன். சினிமா வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டையும் பிரித்து பார்க்க எனக்கு தெரியவில்லை. 2019 வரை அப்படித்தான் இருந்தேன்.ஆனால் 2020-ம் ஆண்டு எனது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. அந்த வருடம்தான் எனது தந்தை மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகுதான் என்னை நானே சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்தேன். அப்போதுதான் எனது சொந்த வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போல் இருப்பதையும், எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லாமல் இருப்பதையும், வாழ்க்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதையும் உணர ஆரம்பித்தேன். திரும்பி பார்க்கையில் மோசமாக உணர்கிறேன்.தற்போது எனது சொந்த வாழ்க்கையையும், சினிமா வாழ்க்கையையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அனைவரும் தங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு போய் இருக்கிறார்கள்.’’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.