சினிமா செய்திகள்

ஒரே ஸ்டூடியோவில் விஜய், கார்த்தி + "||" + Vijay and Karthi in the same studio

ஒரே ஸ்டூடியோவில் விஜய், கார்த்தி

ஒரே ஸ்டூடியோவில் விஜய், கார்த்தி
விஜய், கார்த்தி ஆகியோரின் 2 படங்களின் படப்பிடிப்புகளும் பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டூடியோவில் நடக்கிறது.
கொரோனா ஊரடங்கால் முடங்கி இருந்த சினிமா படப்பிடிப்புகள் தளர்வுக்கு பின் மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விஜய்யின் பீஸ்ட், கார்த்தியின் சர்தார் படப்பிடிப்புகளும் தொடங்கி உள்ளது.

இந்த 2 படங்களின் படப்பிடிப்புகளும் பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டூடியோவில் நடக்கிறது. இதனால் விஜய்யும், கார்த்தியும் படப்பிடிப்பு தளத்தில் நேரில் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. தற்போது விஜய்யும், பூஜா ஹெக்டேவும் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சர்தார் படத்தில் கார்த்தி தந்தை மகனாக இருவேடங்களில் நடிக்கிறார். தந்தை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது விஜய் படப்பிடிப்பு நடக்கும் ஸ்டூடியோவில் வில்லன்களுடன் கார்த்தி மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரம் இதே ஸ்டூடியோவில் சண்டை பயிற்சி எடுத்து கார்த்தி நடிக்கிறார். இந்த படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன் என்று 2 நாயகிகள் நடிக்கின்றனர். அதிரடி சண்டை படமாக தயாராகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பொன்னியின் செல்வனில் நடித்து முடித்த கார்த்தி
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஊரடங்கினால் முடங்கிய படப்பிடிப்பை தளர்வுக்கு பிறகு மீண்டும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள்.
2. பிரபல நடிகருக்காக ஒன்று சேர்ந்த சூர்யா - கார்த்தி
முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரபல நடிகருக்காக ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.
3. பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை உறுதி செய்த கார்த்தி
இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம், ‘பொன்னியின் செல்வன்.’ மணிரத்னம் டைரக்டு செய்கிறார். பிரபு, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், திரிஷா உள்பட திரையுலகின் பல பிரபலங்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்கள்.
4. வித்தியாசமான தோற்றத்தில் மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி
கார்த்தி நடித்து 2019-ல் தேவ், கைதி, தம்பி ஆகிய 3 படங்கள் திரைக்கு வந்தன. கைதி வசூல் சாதனை நிகழ்த்தியது.