சினிமா செய்திகள்

இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள்: காஜல் அகர்வாலை முந்திய ராஷ்மிகா மந்தனா + "||" + Rashmika Mandanna hits 19 million followers on Instagram, shares a special message

இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள்: காஜல் அகர்வாலை முந்திய ராஷ்மிகா மந்தனா

இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள்: காஜல் அகர்வாலை முந்திய ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார், மிஷன் மஜ்னு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்
ஐதராபாத்

தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இவரது நடிப்பில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ வெளியாகவிருக்கிறது. 

தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம்  கவனம் ஈர்த்தார் ராஷ்மிகா. அதுவே, அவரை ‘நேஷனல் க்ரஷ்’ ஆக்கியது. கூகிளில் நேஷனல் க்ரஷ் என்று தேடினால் ராஷ்மிகா மந்தனா பெயர்தான் வரும். பாக்கியராஜ் கண்ணனின் இயக்கத்தில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து உள்ளார்.

 ராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார், மிஷன் மஜ்னு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்

இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகைகளில் அதிக பாலோயர்ஸ் எண்ணிக்கைக் கொண்ட நடிகைகளில் காஜல் அகர்வால் முன்னிலையில் இருந்தார். அவரைத்தொடர்ந்து, நடிகை சுருதிஹாசன், ரகுல் பிரித் சிங், சமந்தா உள்ளிட்டோர் இருந்தனர். இந்த நிலையில், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி 1.92 கோடிக்கும் மேற்பட்ட  பின் தொடர்பவர்களை  பெற்றுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. 

முதல் இடத்தில் இருந்த காஜல் அகர்வால் 1.90 கோடிக்கு மேற்பட்ட பின் தொடர்பவர்களும், சமந்தா 1.75 கோடிக்கு மேற்பட்ட  பின் தொடர்பவர்களும், ரகுல் பிரீத் சிங் 1.72 கோடிக்கு மேற்பட்ட   பின் தொடர்பவர்களை, சுருதிஹாசன் 1.70 கோடிக்கும் மேற்பட்ட  பின் தொடர்பவர்களையும் பெற்றுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. விஜய்க்கும் எனக்கும் பிரச்சினை இருப்பது உண்மைதான்...! ஆனால்...? - எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு வீடியோ
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
2. அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை- நடிகர் சோனு சூட்
ராஜ்யசபை எம்.பி. ஆகும் வாய்ப்பை இரண்டு முறை நிராகரித்ததாக நடிகர் சோனு சூட் கூறி உள்ளார்.
3. நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகைகள் கொள்ளை
நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் ரூ.2. லடசம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
4. அரசியல், விவேக், தி.மு.க. ஆட்சி குறித்து நடிகர் வடிவேலு மனந்திறந்த பேட்டி- வீடியோ
இயக்குனர் சங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க வாய்ப்பே இல்லை. அந்த பக்கமே செல்லமாட்டேன் என நடிகர் வடிவேலு கூறி உள்ளார்.
5. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது
நவம்பர் 4 ந்தேதி தீபாவளி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.