சினிமா செய்திகள்

வெப் தொடர் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா + "||" + In the web series shooting Corona for 5 people

வெப் தொடர் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா

வெப் தொடர் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா
கொரோனா பரவல் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் நடிகைகளும் கொரோனா தொற்றில் சிக்கினர். தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி படப்பிடிப்புகள் பல இடங்களில் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சுனா என்ற வெப் தொடர் படப்பிடிப்பில் பங்கேற்ற 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தொடரில் பிரபல இந்தி நடிகர் ஜிம்மி ஷெர்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு லக்னோவில் நடந்து வருகிறது. 90 பேர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பில் பங்கேற்ற மற்றவர்களை 4 தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தி உள்ளனர். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வேறு படப்பிடிப்புகளில் பங்கேற்றுள்ள நடிகர் நடிகைகள் அச்சத்தில் உள்ளனர்.