சினிமா செய்திகள்

50 ஆண்டுகளில் இப்போதுதான் சினிமாவை விட்டு அதிகநாள் ஒதுங்கி இருந்தேன் கமல்ஹாசன் வருத்தம் + "||" + More time away from the cinema I was aside Kamalhasan is upset

50 ஆண்டுகளில் இப்போதுதான் சினிமாவை விட்டு அதிகநாள் ஒதுங்கி இருந்தேன் கமல்ஹாசன் வருத்தம்

50 ஆண்டுகளில் இப்போதுதான் சினிமாவை விட்டு அதிகநாள் ஒதுங்கி இருந்தேன் கமல்ஹாசன் வருத்தம்
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளார். இதில் கமலுடன் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி கிரேன் சரிந்து உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகு கமல்ஹாசன் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. அரசியல் மற்றும் தேர்தல் பணிகளாலும் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளார். இதில் கமலுடன் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் நடிக்கின்றனர்.

மீண்டும் நடிப்பது குறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “விக்ரம் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் ஒரு உயர்நிலை பள்ளியில் மீண்டும் இணைந்ததுபோல் உணர்ந்தேன். கடந்த 50 ஆண்டுகளில் சினிமா படப்பிடிப்பை விட்டு அதிக நாட்கள் விலகி இருந்தது இப்போதுதான்.

பல தயாரிப்பாளர்கள் ஒரு வருடமாக எந்தவித படப்பிடிப்புகளையும் நடத்தவில்லை. எனது ராஜ்கமல் பட நிறுவனத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க எனது தோழர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர், திறமையான நடிகர்களான விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோரையும் வரவேற்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.