சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.25 கோடி + "||" + Sivakarthikeyan Salary Rs 25 crore

சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.25 கோடி

சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.25 கோடி
சிவகார்த்திகேயன் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். டாக்டர், அயலான் படங்களில் நடித்து முடித்துள்ளார்.
தொலைகாட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். டாக்டர், அயலான் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.

அடுத்து டான் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற ஜதி ரத்னாலு என்ற படத்தை இயக்கி பிரபலமான அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி உள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கு பட உலகிலும் மார்க்கெட் உள்ளதால் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. இதில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் முந்தைய படங்களில் ரூ.15 கோடி வரை சம்பளம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவர் ஒரு படத்துக்கு ரூ.25 கோடி சம்பளம் வாங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.