சினிமா செய்திகள்

வயதான தோற்றத்தில் சென்று விஜய்யை சந்தித்த நடிகர் கார்த்தி + "||" + Go for the aging look Met Vijay Actor Karthi

வயதான தோற்றத்தில் சென்று விஜய்யை சந்தித்த நடிகர் கார்த்தி

வயதான தோற்றத்தில் சென்று விஜய்யை சந்தித்த நடிகர் கார்த்தி
விஜய் நடிக்கும் பீஸ்ட், கார்த்தியின் சர்தார் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்புகளும் சென்னை பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.
சர்தார் படத்தில் கார்த்தி வயதான தந்தை மற்றும் மகனாக இரு வேடங்களில் நடிக்கிறார். வயதானவராக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

வயதான தோற்ற மேக்கப் போட்டுக்கொண்டு கார்த்தி திடீரென்று விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்தார். அங்கு கார்த்தியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. சில நிமிடங்கள் தனியாக நின்று படப்பிடிப்பை பார்த்துக்கொண்டே இருந்தார்.

பின்னர் விஜய் அருகில் சென்று நான்தான் கார்த்தி என்று தன்னை அறிமுகம் செய்தார். கார்த்தியின் தோற்றத்தை பார்த்த விஜய் உங்களை அடையாளமே தெரியவில்லை என்று சொல்லி வியந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். இருவரும் நலம் விசாரித்தனர்.

கார்த்தியிடம் விஜய் “உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றாக நடிக்கிறீர்கள்'' என்று பாராட்டினார். இருவரும் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். பின்னர் கார்த்தி தனது படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.