சினிமா செய்திகள்

‘பொன்னியின் செல்வன்' ஐஸ்வர்யாராய் நடித்த காட்சிகள் படமானது + "||" + ‘Ponniyin Selvan’ is a film starring scenes starring Aishwarya

‘பொன்னியின் செல்வன்' ஐஸ்வர்யாராய் நடித்த காட்சிகள் படமானது

‘பொன்னியின் செல்வன்' ஐஸ்வர்யாராய் நடித்த காட்சிகள் படமானது
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் நாவல் படமாகி வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே தாய்லாந்து காடுகளில் நடத்தினர். கொரோனா 2-வது அலையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு நேற்று மீண்டும் புதுச்சேரியில் தொடங்கியது. இதில் ஐஸ்வர்யாராய் பங்கேற்று நடித்தார். ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பட்டியல் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த பட்டியலில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம்ரவி, பிரபு, ஜெயராம், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், விக்ரம் பிரபு, அஷ்வின், விஜய் ஜேசுதாஸ், லால், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், ரியாஷ்கான், மோகன்ராம், அர்ஜுன் சிதம்பரம், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபலா, ஜெயசித்ரா ஆகியோர் பெயர்கள் உள்ளன. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் போஸ்டரையும் படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.