சினிமா செய்திகள்

சூர்யா படத்தின இசையமைப்பாளர் மரணம் + "||" + Death of Surya film composer

சூர்யா படத்தின இசையமைப்பாளர் மரணம்

சூர்யா படத்தின இசையமைப்பாளர் மரணம்
சூர்யா படத்தின இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் மரணம் அடைந்தார்.
தமிழ், இந்தி படங்களில் இசையமைத்துள்ளவர் டி.எஸ்.முரளிதரன். இவர் சூர்யா நடிப்பில் 2002-ல் வெளியான ஸ்ரீ படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற வசந்த சேனா, வசந்த சேனா பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

நடிகர் விக்ரம், மீனா பாடிய தனி இசை ஆல்பத்துக்கும் இவர் இசையமைத்துள்ளார். கோத்தம் என்ற இந்தி படம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இரண்டு பேர் மட்டுமே நடித்த, வித்தையடி நானுனக்கு படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். டி.எஸ்.முரளிதரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. மறைந்த முரளிதரனுக்கு பானு என்ற மனைவி உள்ளார்.