சினிமா செய்திகள்

3-வது அலை ஆபத்து தடுப்பூசி போடும்படி எச்சரிக்கும் பிரியாமணி + "||" + Briyamani warns against 3rd wave risk vaccination

3-வது அலை ஆபத்து தடுப்பூசி போடும்படி எச்சரிக்கும் பிரியாமணி

3-வது அலை ஆபத்து தடுப்பூசி போடும்படி எச்சரிக்கும் பிரியாமணி
3-வது அலை மிகவும் ஆபத்தாக இருக்கும் என்று சொல்கிறார்கள் எனவே எல்லாரும் தடுப்பூசி போடும்படி நடிகை பிரியாமணி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழில் பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிரியாமணி தொடர்ந்து அதிக படங்களில் நடித்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்த அவர் தற்போது மீண்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் பேமிலிமேன் வெப் தொடரில் நடித்தார். அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்து இருக்கிறார். பிரியாமணி அளித்துள்ள பேட்டியில், “நாரப்பா படத்தில் நடித்தபோது பத்து வருடங்களுக்கு முன்னால் நடித்து தேசிய விருது பெற்ற பருத்தி வீரன் படம் நினைவுக்கு வந்தது. கிராமத்து பெண் கதாபாத்திரங்களில் நிறைய நடித்து விட்டேன்.

எல்லோரும் நிறைய திட்டங்களோடு இருந்தார்கள். எல்லாவற்றையும் கொரோனா அழித்துவிட்டது. கொரோனாவால் உலகமே தலைகீழாக மாறிப்போனது. நான் எப்போதுமே எதிர்கால திட்டம் எதுவும் வைத்துக்கொள்வது இல்லை. சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள் ஆகிவிட்டது. வாழ்க்கை எப்படி போகுதோ அப்படி போய்க்கொண்டே இருக்கிறேன். கொரோனா காலத்தில் எல்லோரும் குடும்பத்தை பாதுகாத்துக்கொள்வது முக்கியம். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். போடாதவர்கள் இனிமேலாவது போட்டுக்கொள்ளுங்கள். 3-வது அலை மிகவும் ஆபத்தாக இருக்கும் என்று சொல்கிறார்கள். எனவே எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள். தேவை இல்லாமல் வெளியே போகாதீர்கள்'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கணவருடன் பிரச்சினையா? பிரியாமணி விளக்கம்
கணவருடன் பிரச்சினையா? பிரியாமணி விளக்கம்.