சினிமா செய்திகள்

புகைப்படம் எடுத்தபோது குளத்தில் தவறி விழுந்த ரித்திகா சிங் + "||" + Ritika Singh falling in the pond when photographed

புகைப்படம் எடுத்தபோது குளத்தில் தவறி விழுந்த ரித்திகா சிங்

புகைப்படம் எடுத்தபோது குளத்தில் தவறி விழுந்த ரித்திகா சிங்
கோவில் குளத்தின் அருகே உட்கார்ந்து ரித்திகா சிங் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தபோது திடீரென்று குளத்தில் தவறி விழுந்தார்.
தமிழில் மாதவனின் இறுதி சுற்று படத்தில் அறிமுகமான ரித்திகா சிங், ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிச்சைக்காரன் 2, வணங்காமுடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ரித்திகா சிங் அடிக்கடி தன்னை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் ஒரு கோவில் குளத்தின் அருகே உட்கார்ந்து ரித்திகா சிங் போட்டோ ஷூட் நடத்தினார். போட்டோ ஷூட் குழுவினர் சுற்றி நின்று அவரை புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர்.

போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தபோது திடீரென்று ரித்திகா சிங் குளத்தில் தவறி விழுந்து தன்ணீரில் மூழ்கினார். இதனால் சுற்றி நின்றவர்கள் பதறினார்கள். தண்ணீரில் தத்தளித்த ரித்திகா சிங்கை குளத்தில் இருந்து வெளியே இழுத்து மீட்டனர். குளத்தில் விழுந்ததால் உடைகள் நனைந்தன. பின்னர் ஈர உடையோடு போட்டோ ஷூட்டை நடத்தி முடித்தனர்.