சினிமா செய்திகள்

சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகம் + "||" + Sunda Travels second part

சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகம்

சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகம்
முரளி, வடிவேலு நடித்து 2002-ல் வெளியாகி வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் நகைச்சுவை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன.
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, சுந்தர்.சி.யின் அரண்மனை ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களும் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம். லாரன்சின் காஞ்சனா ஆகிய படங்களின் 3 பாகங்கள் வெளியானது. தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் தயாராகிறது.

இந்த நிலையில் முரளி, வடிவேலு நடித்து 2002-ல் வெளியாகி வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் நகைச்சுவை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதில் முரளி கதாபாத்திரத்தில் கருணாகரனும், வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.