கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர்கள்


கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர்கள்
x
தினத்தந்தி 21 July 2021 5:28 AM GMT (Updated: 2021-07-21T10:58:08+05:30)

கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்து குறைந்த நாட்களிலேயே முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தன்னுடன் நடித்த நடிகர்களின் பிடித்த குணங்கள் பற்றி கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:-

“நான் பள்ளியில் படித்த நாட்களிலேயே சூர்யாவுக்கு பெரிய ரசிகை. எனது அம்மா சூர்யாவின் அப்பா சிவகுமாருடன் சில படங்களில் நடித்து இருக்கிறார். எனது அம்மாவிடம் சூர்யாவுடன் ஒரு நாள் நடிப்பேன் என்று சவால்விட்டேன். அது நிஜமானது.

சூர்யா படப்பிடிப்பு அரங்கில் அவருக்குத் தொடர்பு உள்ள காட்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார். ஏதாவது சந்தேகம் இருந்து நாம் கேட்டால் மட்டும்தான் யோசனை சொல்வார். சக நடிகைகளை உற்சாகப்படுத்துவதில் முன்னணியில் இருப்பார். ஆனால் யார் விஷயத்திலும் மூக்கை நுழைக்கமாட்டார்.

நடிகையர் திலகம் படத்தில் துல்கர் சல்மான் நடிப்பை பார்த்து அசந்தேன். ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்தார். தெலுங்கில் நானியை யதார்த்த நடிகர் என்பார்கள் நிஜமாகவே அவரது நடிப்பு சகஜமாக இருக்கும். கஷ்டமான காட்சிகளையும் சுலபமாக நடிப்பதை பார்த்து வியந்து இருக்கிறேன்''. இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

Next Story