நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல்


நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல்
x
தினத்தந்தி 22 July 2021 4:53 AM GMT (Updated: 2021-07-22T10:23:49+05:30)

லேட்டஸ்ட் மாடல் பைக்கில் நடிகர் அஜித் வலம் வந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் - இயக்குனர் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தின் அப்டேட்டிற்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், இறுதியாக கடந்த 11 ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இயல்பாகவே கார் ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்டவரான நடிகர் அஜித், பைக்கில் தனியாக நீண்ட தூரம் பயணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு அவர் தனியாக பைக் ரைடிங் சென்ற இடங்களில் ரசிகர்களின் கேமரா கண்களில் சிக்கி, அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி விடும்.

அந்த வகையில் அஜித் தற்போது புதிதாக வெளியாகி இருக்கும் பி.எம்.டபில்யூ. நிறுவனத்தின் ஆர் 1250 ஜி.எஸ். மாடல் பைக்கில் வலம் வந்த புகைப்படங்கள் தற்போது அவரது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ.20.45 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story