சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் விஷால் காயம் + "||" + Vishal injured in shooting

படப்பிடிப்பில் விஷால் காயம்

படப்பிடிப்பில் விஷால் காயம்
வில்லனுடன் விஷால் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது இரும்புத்தடுப்பில் விழுந்ததில் விஷால் காயம் அடைந்தார்.
விஷால் தனது 31-வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்காத இந்த படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்குகிறார். நாயகியாக ஹயாத்தி மற்றும் யோகிபாபு, ரவீனா ஆகியோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தற்போது வில்லனுடன் விஷால் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. விஷாலை வில்லன் தூக்கி எறிவதுபோல் காட்சியை எடுத்தனர். 

அப்போது விஷால் ஒரு இரும்புத்தடுப்பில் விழுந்தார். இதில் அவரது முதுகில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக பிசியோதெரபி மருத்துவர் வரவழைக்கப்பட்டு விஷாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. விஷால் கைவசம் எனிமி, துப்பறிவாளன் 2 ஆகிய மேலும் 2 படங்கள் உள்ளன. எனிமி படப்பிடிப்பு முடிந்துள்ளது. 

இதில் வில்லனாக ஆர்யா நடிக்கிறார். துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குனர் மிஷ்கினுக்கும, விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த படத்தை விஷாலே இயக்குவதாக அறிவித்தார். இதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது.