வித்தியாசமான கதையை விரும்பும் ராஷ்மிகா


வித்தியாசமான கதையை விரும்பும் ராஷ்மிகா
x
தினத்தந்தி 22 July 2021 5:54 AM GMT (Updated: 2021-07-22T11:24:03+05:30)

வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில் கூறினார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தி படத்திலும் நடிக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், “பெரிய வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிற பெண்கள் சிறிய விஷயங்களை தங்களிடம் நெருங்க விடக்கூடாது. நாம் செய்கிற வேலை நன்றாக இருந்தால் எல்லோரும் ஆதரிப்பார்கள். 

எனது விஷயத்தில் அதுதான் நடந்து இருக்கிறது. நான் வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். ஏற்கனவே நடித்த படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களே அமைந்தன. இத்தனை கதாபாத்திரங்களிலும் ஆதரித்த ரசிகர்களுக்கு எப்போதும் கடமைப்பட்டு உள்ளேன். எனது வேகம் தெரிய வேண்டும் என்றால் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

அமிதாப்பச்சனுடன் நடிப்பது மகிழ்ச்சி. இதை கனவிலும் நினைக்கவில்லை. சினிமாவுக்கு எல்லை இருக்க கூடாது. ஓ.டி.டி. தளத்திலும் படங்கள் வருகிறது. நான் எந்த மொழியிலும் நடிப்பேன்’’ என்றார்.

Next Story