மாநில செய்திகள்

நடிகர் விஜய் வழக்கு: விசாரணைக்கு பட்டியலிட சென்னை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Actor Vijay case: Chennai High Court orders list for trial

நடிகர் விஜய் வழக்கு: விசாரணைக்கு பட்டியலிட சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் விஜய் வழக்கு: விசாரணைக்கு பட்டியலிட சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, 

நடிகர் விஜய் 2012-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காருக்கான அனுமதிக்கப்பட்ட வரிகளை செலுத்தியிருந்தார். ஆனால், தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டார். மேலும் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்த்தும் நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். 

இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு மாற்றம் செய்ய பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு, வரி தொடர்பான மேல் முறையீட்டு விசாரணை செய்யும் நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற நடிகர் விஜய்-யின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆயிஷா சுல்தானா மீதான வழக்கு - லட்சத்தீவு போலீசார் கேரளா ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்
ஆயிஷா சுல்தானா தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை எதிர்த்து லட்சத்தீவு போலீசார் கேரளா ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
2. பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வழக்கு
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குக்கு போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு
சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
4. பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் ரூ.35 லட்சம் மோசடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 18 பேர் மீது வழக்கு
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் உண்மையான பயனாளிகளுக்கு ஒதுக்கிய ரூ.35 லட்சத்தை கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட 3 வட்டார வளர்ச்சி அதிகாரிகள், என்ஜினீயர் உள்ளிட்ட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
5. திருவள்ளூர் அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
திருவள்ளூர் அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு.